புரி ஜெகந்நாதர் கோயிலில் ஜன.1 முதல் ஆடைக் கட்டுப்பாடு!

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் 2024, ஜனவரி 1 முதல் ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்த உள்ளதாகக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
புரி ஜெகந்நாதர் கோயிலில் ஜன.1 முதல் ஆடைக் கட்டுப்பாடு!

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில் 2024, ஜனவரி 1 முதல் ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்த உள்ளதாகக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து புரி ஜெகந்நாதர் கோயிலின் நிர்வாக தலைமை அதிகாரி ரஞ்சன் குமார்தாஸ் கூறியது, 

கோயிலின் கண்ணியத்தையும் புனிதத்தையும் காப்பது நமது கடமை. கோயிலுக்கு வரும் ஒரு சில பக்தர்கள் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் போன்ற ஆடைகளை அணிந்து வருகின்றது. இது கோயிலுக்கு வரும் பக்தர்களை முகம் சுழிக்க வைக்கிறது. 

கோயில் நிர்வாகம் குறிப்பிட்ட ஆடைக் கட்டுப்பாடு எதையும் நடைமுறைப்படுத்தவில்லை என்றாலும் பேன்ட், சட்டை, சுடிதார், வேட்டி, சேலை போன்ற கண்ணியமாக ஆடைகளை அணியுமாறு பக்தர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த ஆடைக் கட்டுப்பாட்டை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

கோயிலில் சிலர் அநாகரிகமான உடை அணிந்து வருவதால் நிதி துணைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் விரைவில் பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com