
மேற்கு வங்கத்தின் பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்தில் மூன்று பேர் பலியாகினர்.
ராணிகஞ்ச் காவ நிலையப் பகுதியில் உள்ள ஏக்ரா கிராமப் பஞ்சாயத்தில்உள்ள நாராயண்குடி பகுதியில் உள்ள ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் சுரங்கத்தில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கப்பட்டபோது இந்தச் சவம்பவம் நிகழ்ந்துள்ளது.
சுரங்க விபத்தில் இறந்தவர்கள் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் தினேஷ் ரூயிடாஸ்(38), சுமிர் பௌரி(17), சுர்ஜித் சென்(21) என அடையாளம் காணப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சீதாராம்பூர் சுரங்க பாதுகாப்பு மண்டலம் 1 இயக்குநர் ஜெனரல் இர்பான் அகமது அன்சாரி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
இது சட்டப்பூர்வ சுரங்கம், ஆனால் புதன்கிழமை பிற்பகல் சட்டவிரோதமாக நிலக்கரி எடுக்கும் போது இந்த சம்பவம் நடந்தது. 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.