படிப்பறிவில்லாத பிள்ளை ராகுல்: அசாம் முதல்வர் தாக்கு!

குடும்ப அரசியல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் சமீபத்திய பேச்சுக்கு, படிப்பறிவில்லாத குழந்தை ராகுல் என அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா அவரை கடுமையாகச் சாடியுள்ளார். 
ஹிமந்தா பிஸ்வா சர்மா
ஹிமந்தா பிஸ்வா சர்மா

குடும்ப அரசியல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் சமீபத்திய பேச்சுக்கு, படிப்பறிவில்லாத குழந்தை ராகுல் என அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா அவரை கடுமையாகச் சாடியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய அசாம் முதல்வர், 

மிசோரம் மாநிலத் தலைநகர் ஐஸ்வாலில் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாக  பாஜக குற்றம் சாட்டுகிறது. ஆனால், அமித்ஷா மகன், ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றார்? இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் வாரிசு அரசியலை பாஜக அம்பலப்படுத்தும் போதெல்லாம், பாஜக தலைவர்களது குடும்பத்தில் ஒரு சிலர் அரசியலில் இருப்பதை எதிர்வாதமாக முன் வைப்பதை வாரிசு தலைமை கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. ராகுலும் அதைத்தான் செய்திருக்கிறார். பாஜக மீதும் வாரிசு அரசியல் பழியை சுமத்த முயற்சித்திருக்கிறார்.

அவரைப் பற்றி என்னிடம் அதிகம் கேட்க வேண்டாம், அவர் படிப்பறிவில்லாத பிள்ளை. 

உ.பி.யில் வெறும் எம்எல்ஏவாக இருக்கும் ராஜ்நாத் சிங்கின் மகனை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியுடன் ஒப்பிட முடியுமா? அவர் பாஜகவை கட்டுப்படுத்துகிறாரா? 

ராகுல் காந்தி புதிய நபர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு, பிறகு குடும்ப அரசியல் பற்றிப் பேச வேண்டும். ராகுலுக்கு அரசியலில் எந்த அறிவும் இல்லை, அவர் குடும்ப அரசியலில் இருப்பதை உணரவில்லை. அம்மா, அப்பா, தாத்தா, தங்கை என எல்லோரும் அரசியலில் இருந்துகொண்டு கட்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள். 

குடும்ப அரசியல் பற்றி காந்தி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று முதல்வர் சர்மா கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com