

புபல்பள்ளி: தெலங்கானாவில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
தெலங்கானாவின் புபல்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற விஜயபேரி பயணத்திற்கு இடையே மக்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு என்பது, நாட்டின் மிக முக்கிய விவகாரம். ஆனால், இது பற்றி பிரதமர் நரேந்திர மோடியும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் மௌனம் சாதித்து வருகிறார்கள் என்றார்.
இதையும் படிக்க.. எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா லியோ? திரை விமர்சனம்
தெலங்கானாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் ராகுல் காந்தி மேலும் பேசுகையில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு என்பது, நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை ஐந்து சதவீதம் மட்டுமே உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும் எக்ஸ்ரே போன்றது என்றார். நாட்டில் ஓபிசி வகுப்பினர் வெறும் 5 சதவீதம் மட்டும்தான் உள்ளனரா என்று கேட்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் கர்நாடகத்தில் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுவிட்டது. தெலங்கானாவில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், முதல் வேளையாக, தெலங்கானாவுக்கு எக்ஸ்ரே எடுப்போம். தெலங்கானாவில், காங்கிரஸ் ஆட்சி, ஏழை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான ஆட்சியாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த எக்ஸ் ரே மூலம், தெலங்கானாவில், முதல்வர் குடும்பத்தினரால் சுரண்டப்பட்ட மக்களின் பணம் எவ்வளவு என்பதையும் காட்டிக்கொடுத்துவிடும் என்றும் ராகுல் கூறினார்.
நாட்டிலேயே அதிக முறைகேடு நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தெலங்கானா உள்ளதாகவும் தெலங்கானா மாடல், பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் ராகுல் கடுமையாகத் தாக்கிப்பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.