ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சத்தீஸ்கரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
Updated On :21 அக்டோபர் 2023, 6:33 am

DIN

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மாநில காவல்துறையின் ஒரு பிரிவான மாவட்ட ரிசர்வ் காவலர் குழு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, கோயாலிபேடா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வனப்பகுதியில் காலை 8 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டது. 

துப்பாக்கிச் சண்டை நிறுத்தப்பட்டதையடுத்து, இண்டு நக்சலைட்டுகளின் உடல்கள் மற்றும் அவர்களிடமிருந்த துப்பாக்கி, 2 போர் ரைபின் மற்றும் பிற ஆயுதக்ள் மற்றும் வெடிமருந்துகள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. 

இறந்த நக்சலைட்டுகளின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அருகிலுள்ள பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

சத்தீஸ்கரில் நவம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ள இரண்டு கட்ட தேர்தலின் முதல் கட்டமாக 20 சட்டமன்றத் தொகுதிகளில் கான்கேர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.