
தெலங்கானவில் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம் என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. அவரது கட்சிக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. இரு தரப்பும் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனிடையே பிடிஐ-க்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா அளித்த பேட்டியில், தெலங்கானாவில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என்று 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் தெலங்கானா மக்கள் எப்போதும் எங்களுடன் இருக்கிறார்கள், நாங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்கிறோம்.
இந்த நாட்டில் எந்த மாநிலமும் கனவில் கூட நினைத்துப் பார்க்காத பல விஷயங்களை நாங்கள் நடைமுறையில் செய்துள்ளோம். 95 முதல் 100 இடங்கள் வரை பிடிப்பதே எங்களின் இலக்கு. நாங்கள். நிச்சயமாக அந்த எண்ணுக்கு மிக அருகில் இறங்குவோம். ராகுல் காந்தியிடம், என்ன ஸ்கிரிப்ட் ஒப்படைக்கப்பட்டாலும் அவர் படித்துக் காட்டுவார் என்றார்.
மேலும் கே.சந்திரசேகர் ராவ் அரசு மீது ராகுல் காந்தி கூறிய ஊழல் குற்றச்சாட்டு குறித்து கவிதா கூறுகையில், மத்திய அரசின் கணக்கெடுப்பின்படி, தெலங்கானாதான் ஊழல் குறைந்த மாநிலம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.