2029 மக்களவைத் தேர்தலுடன் அனைத்து மாநிலங்களிலும் பேரவைத் தேர்தல்!
2029 மக்களவைத் தேர்தலுடன் அனைத்து மாநிலங்களிலும் பேரவைத் தேர்தலை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை அமலாக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கூட்டம் இன்று(அக்.25) நடைபெற்றது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை மத்திய அரசு கடந்த 2-ஆம் தேதி அமைத்தது. இக்குழுவின் உறுப்பினா்களாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 7 போ் அறிவிக்கப்பட்டனா். ஆனால், குழுவில் அங்கம்வகிக்க அதீா் ரஞ்சன் செளதரி மறுத்துவிட்டாா்.
இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ நடைமுறையை அமலாக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயா்நிலைக் குழுவிடம் இந்திய சட்ட ஆணையம் தனது கருத்தை இன்று தெரிவித்தது.
இன்று நடைபெற்றக் கூட்டத்தில், பரஸ்பர ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடலை நடத்துமாறு குழு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: இன்ஸ்டாகிராமால் மன அழுத்தம், தூக்கமின்மை! மெட்டா மீது வழக்கு!!
மேலும், 2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் வகையில், தற்போதைய பதவிக் காலத்தை நீட்டிப்பது அல்லது குறைப்பது மூலம் அனைத்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒன்றினைப்பதற்கான தீர்வைக் கண்டறிய சட்ட ஆணையம் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

