
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் புதிய வேட்பாளர்களை காங்கிரஸ் புதன்கிழமை அறிவித்துள்ளது.
5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றது.
இந்தநிலையில் ம.பி.யில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், தற்போது மீண்டும் மாற்றியமைத்து புதிய வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
படிக்க: தனுஷ் - 50 படப்பிடிப்பு தீவிரம்!
திருத்தப்பட்ட பட்டியலின்படி, சுமவாலி தொகுதியில் குல்தீப் சிகார்வாருக்குப் பதிலாக அஜப் சிங் குஷ்வாஹாவும், பிபாரியா(எஸ்சி) தொகுதியில் குரு சரண் கரேவுக்குப் பதிலாக வீரேந்திர பெல்வன்ஷியும், பட்நகர் தொகுதியில் ராஜேந்திர சிங் சோலங்கிக்கு பதிலாக முரளி மோர்வாலும், ஜாயோரா தொகுதியில் ஹிம்மத் ஸ்ரீமாலுக்குப் பதிலாக வீரேந்தர் சிங் சோலங்கியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக ம.பி சட்டப்பேரவைக்கு 85 வேட்பாளர்களைக் கொண்ட இரண்டாவது பட்டியலையும், 144 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்களையும் அறிவித்தது.
நவம்பர் 17-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.