மேற்கு வங்க அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை!

ரேஷன் விநியோக முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 18 மணி நேரம் விசாரணை நடந்ததை அடுத்து மேற்குவங்க அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் கைது செய்யப்பட்டார்
மேற்கு வங்க அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை!

ரேஷன் விநியோக முறைகேடு வழக்கு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்தது அமலாக்கத்துறை.

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக 18 மணி நேரம் விசாரணை நிறைவடைந்த நிலையில் அமைச்சர் ஜோதி மல்லிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தாவின் புறநகரில் உள்ள சால்ட் லேக் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மத்திய ஏஜென்சி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதையடுத்து அவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோர உள்ளது. நீரிழிவு நோய் மற்றும் பல நோய்களைக் கொண்டுள்ள மல்லிக், நகரின் தெற்குப் பகுதியில் உள்ள ஜோகாவில் உள்ள ஒரு ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த மல்லிக், “மிகப்பெரிய சதிச்செயலுக்கு நான் பலியாகிவிட்டேன். முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகியும், தற்போதைய பாஜக நிர்வாகியான சுவேந்து அதிகாரியின் சதிச்செயலே இவை” என குறிப்பிட்டுள்ளார்.

மல்லிக் வீட்டில் நடைபெற்ற சோதனையானது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com