19 வயது ஹரியாணா இளைஞருக்கு இன்டர்போல் தடுப்பு ஆணை!

யோகேஷ் கடியான் என்பவருக்கு சர்வதேச காவல் துறை தடுப்பு ஆணை பிறப்பித்துள்ளது.
19 வயது ஹரியாணா இளைஞருக்கு இன்டர்போல் தடுப்பு ஆணை!

இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற ஹரியாணாவைச் சேர்ந்த யோகேஷ் காடியன் என்பவருக்கு எதிராக சர்வதேச காவல் துறை, தடுப்பு ஆணை பிறப்பித்துள்ளது.

19 வயதான யோகேஷ் கடியான் அமெரிக்காவுக்கு போலி கடவுச்சீட்டில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற சதிகள் மற்றும் கொலை முயற்சிக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

ஆயுதங்களைக் கையாள்வதில் திறன்வாய்ந்த இவர், எதிரி கும்பலான லாரன்ஸ் பிஸ்னாயின் கும்பலை வீழ்த்தும் திட்டத்தில் பங்கு கொண்டிருப்பார் என நம்பப்படுகிறது.

சர்வதேச காவல் துறை (இன்டர்போல்) ரெட் கார்ட் நோட்டீஸ் எனப்படும் தடுப்பு ஆணை பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் இவர் குறித்து தகவல் தருபவருக்கு 1.5 லட்சம் வெகுமதியாகவும் அறிவித்துள்ளது.  

தடுப்பு ஆணை என்பது சர்வதேச காவல் துறையின் உறுப்பு நாடுகளுக்கு இன்டர்போல் அனுப்பும் ஆணையைக் குறிக்கும். அதன்படி அந்த நபரைக் கண்டுபிடித்து தற்காலிகமாக தடுத்து வைக்கக் கோரும் ஆணை.  

யோகேஷ், பாம்பிஹ கும்பலோடு தொடர்பில் இருப்பவர் என்றும் காலிஸ்தான் பிரிவினவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இதற்கு முன்பு ஹிமான்ஸு அல்லது பாஹூ என்பவருக்கு எதிராக இன்டர்போல் தடுப்பு ஆணை பிறப்பித்தது.

இது கும்பல் சண்டையாக நீடிக்கிறது. லாரன்ஸ் பிஸ்னாயின் கும்பலை வீழ்த்தி கனடா மற்றும் அமெரிக்காவில் தங்களின் ஆளுகையை நிலைநாட்ட இவர்கள் திட்டமிட்டு வருவதாகக் கருதப்படுகிறது. 

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு லாரன்ஸ் பிஸ்னாய் அகமதாபாத் சிறையில் உள்ளார். பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் இவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com