சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் வேட்புமனு தாக்கல்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பதான் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். 
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் வேட்புமனு தாக்கல்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பதான் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். 

சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. 

90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 5 மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகின்றன. 

இந்நிலையில், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் பதான் தொகுதியில் போட்டியிட முதல்வர் பூபேஷ் பாகல் இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்த துர்க் பகுதி எப்போதும் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வருகிறது. பாஜக, சத்தீஸ்கர் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. சத்தீஸ்கர் மக்களுக்குத் தெரியும், அவர்களின் உத்தரவாதங்களை நம்பப் போவதில்லை. அவர்கள் காங்கிரஸுக்கும் இந்த அரசின் தலைவர் பூபேஷ் பகேலுக்கும் நம்பிக்கை தருவார்கள்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com