கத்தாரில் உள்ள இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: ஜெய்சங்கர் உறுதி!

கத்தாரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
கத்தாரில் உள்ள இந்தியர்களை விடுதலை செய்ய நடவடிக்கை: ஜெய்சங்கர் உறுதி!

கத்தாரில் சிறை வைக்கப்பட்டுள்ள 8 இந்தியர்களை விடுதலை செய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் குடும்பங்களை சந்தித்தபின் தெரிவித்துள்ளார். 

உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய கடற்படை வீரர்களின் குடும்பத்தினரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார். 

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “கத்தாரில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் குடும்பத்தினரை இன்று (திங்கள்கிழமை) சந்தித்தேன். இந்த வழக்குக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என உறுதியளித்தேன். 

அந்தக் குடும்பங்களின் கவலை மற்றும் வலிகளை முழுமையாகப் பகிர்ந்து கொண்டேன். இந்திய வீரர்களை விடுதலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.” இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com