'அவரே என் பலம்' - இந்திரா காந்தி நினைவு நாளில் ராகுல் பதிவு!

நீங்கள்தான் என் வலிமை என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
தில்லியில் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி
தில்லியில் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி

நாட்டின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் தலைவா்கள் அவருக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா். அவருடைய சாதனைகளை நினைவு கூா்ந்தனா்.

தில்லியில் உள்ள இந்திரா காந்தியின் ‘சக்தி ஸ்தல்’ நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டடோா் மலரஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, சஃப்தா்ஜங் சாலையில் உள்ள இந்திரா காந்தி நினைவு இல்லத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்வில் முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீது அன்சாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திரா காந்தி நினைவு தினத்தையொட்டி ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘என்னுடைய பாட்டிதான் எனக்குப் பலம். நீங்கள் நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்தீா்கள். அந்த நாட்டை நான் எப்போதும் பாதுகாப்பேன். உங்களுடைய நினைவு எப்போதும் என்னுடன் இருக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சஞ்சய் காந்தி மகனும் பாஜக எம்.பி.யுமான வருண் காந்தி வெளியிட்ட பதிவில், ‘ஈடுசெய்யமுடியாத தைரியம், ஜனநாயக பொதுவுடைமை ஆகியவற்றின் அடையாளமாக இருந்த எனது பாட்டி இந்திரா காந்திக்கு அவருடைய நினைவு தினத்தில் மரியாதை செலுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி, கடந்த 1984-ஆம் ஆண்டு அக். 31-இல் தனது மெய்க்காப்பாளா்களால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com