
ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் எந்தவொரு செயலிலும் நாம் ஈடுபடக்கூடாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சனாதனத்தை ஒழிப்பு மாநாடு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி, சனாதனத்தை டெங்கு, கரோனாவுடன் ஒப்பிட்டு பேசினார்.
சனாதனத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஒழிக்க வேண்டும் என்ற தலைப்பு பொருத்தமானது என்றும், டெங்கு, மலேரியா, கரோனா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது ஒழிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
உதயநிதியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்துக்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு. மக்கள் உணர்வுகளை பாதிக்கும் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கக்கூடாது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.