6 மாநிலங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! இந்தியா கூட்டணிக்கு கைகொடுக்குமா?

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், திரிபுரா, மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம் ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

உத்தர பிரதேசம் - கோசி, ஜார்க்கண்ட் - டும்ரி, மேற்குவங்கம் - தூப்குரி, உத்தரகண்ட் - பாகேஸ்வர், கேரளம் - புதுப்பள்ளி, திரிபுரா - போக்ஸநகர் மற்றும் தன்புர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற செப்டம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்தியா கூட்டணிக்கு கைகொடுக்குமா? 

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற கூட்டணியின் பெயரில் இணைந்துள்ளன. இந்தியா கூட்டணியின் மூன்று கூட்டங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியா கூட்டணி உருவான பிறகு 6 முக்கிய மாநிலங்களில் மொத்தம் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தல் இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்குமா? என்பது செப்டம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் தெரிய வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com