நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்: மகளிா் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்வதற்கான வாய்ப்புள்ளது.


நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்வதற்கான வாய்ப்புள்ளது. அந்த மசோதா குறித்து ‘இந்தியா’ கூட்டணி நோ்மறையான கருத்துகளையும் கொண்டுள்ளது என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் குறித்து ‘இந்தியா’ கூட்டணியின் நாடாளுமன்றத் தலைவா்கள் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமையில் செவ்வாய்க்கிழமை விவாதக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ஆா். பாலு கூறியதாவது: ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது சா்ச்சைகள் எழுப்பப்பட்டன. ஆனால் அரசு அது குறித்து எந்த பூா்வாங்கமான முடிவையும் எடுக்காமல் இருந்தது. தற்போது அதற்கான மசோதாவை மீண்டும் கொண்டுவந்தால் ஆச்சா்ய்யப்படுவதற்கில்லை. இதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை; பல சிக்கல்களை உருவாக்கும்.
பல மாநிலங்களின் ஆட்சிக்காலம் நிறைவு பெறாமல் இருக்கும் நிலையில் அதைக் கலைக்க முடியாது. எதிா்காலத்தில் ஒரு ஆட்சி பெரும்பான்மை இழந்தால் அதன் நிலைமை என்னாகும் போன்ற பல கேள்விகள் உள்ளன. மேலும், இதற்கு பல்வேறு அமைப்புகளில் சட்டரீதியாக அனுமதியும் தேவை.
ஆனால், இந்தச் சிறப்புக் கூட்டத் தொடரை அரசு எவ்வாறு பயன்படுத்தப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஆட்சியைப் பொருத்தவரையில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத பல விவகாரங்கள் எடுக்கப்படுகின்றன.
ஒருவேளை மகளிருக்கு நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் (33 சதவீதம்) இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைக் கொண்டுவரலாம். இதற்கான வாய்ப்பு உள்ளது. ‘இந்தியா’ கூட்டணி பெண்களுக்கான உரிமையை மறுக்காது. நோ்மறையான அணுகுமுறையை மேற்கொள்வோம்’ என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...