ஜி20 உச்சி மாநாடு: காலை 4 மணி முதல் தில்லி மெட்ரோ ரயில் சேவை!

ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் செப். 8,9,10 ஆகிய தேதிகளில் அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 
ஜி20 உச்சி மாநாடு: காலை 4 மணி முதல் தில்லி மெட்ரோ ரயில் சேவை!

ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளதால் செப். 8,9,10 ஆகிய தேதிகளில் அனைத்து வழித்தடங்களிலும் தில்லி மெட்ரோ சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

உச்ச நீதிமன்றம், படேல் சௌக் மற்றும் ஆர்.கே ஆசிரமம் மார்க் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடத்தில் வசதிகள் செப்டம்பர் 8-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் செப். 11ஆம் தேதி மதியம் வரை மூடப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வழக்கமாக மெட்ரோ ரயில் சேவை 5.30-க்கு தொடங்கும் நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் 8,9,10 ஆகிய தேதிகளில் மெட்ரோ சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. 

ஜி-20 மாநாடு தில்லியின் பிரகதி மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையமான பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. 

தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் செப்டம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாள்களுக்கு அனைத்து வழித்தடங்களின் முனைய நிலையங்களிலிருந்தும் அதிகாலை 4 மணி முதல் தொடங்கும். காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும், காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான கால அட்டவணையின்படி இயங்கும் எனத் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com