ஜோ பைடன்
ஜோ பைடன்

இந்தியா வந்தார் அதிபர் ஜோ பைடன்!

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.


ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகை புரிந்தார். தனி விமானம் மூலம் தலைநகர் தில்லி வந்த ஜோ பைடனை மத்திய அமைச்சர் வி.கே. சிங் வரவேற்றார். 

பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (செப். 8) இரவு இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜோ பைடன் ஈடுபடவுள்ளார். அதில் இரு நாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பாக முதுகலை மாணவர்களுக்கான விசாக்களில் மீண்டும் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது.

மரபுசாரா எரிசக்தி, வா்த்தகம், பாதுகாப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் ஒப்பந்தங்கள் குறித்தும் உலகம் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடியான சவால்களை எப்படி எதிா்கொள்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

ஜி-20 மாநாடு தில்லியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.9, 10) நடைபெறுகிறது. இதற்காக ஜி-20 கூட்டமைப்பைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் தலைநகர் தில்லிக்கு வருகை புரிகின்றனர். இதனையொட்டி தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

விருந்தினர்கள் தங்குவதற்கான விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் முழு வீச்சில் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

ஜி-20 கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரஷிய அதிபா் விளாதிமீர் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. சீன அதிபருக்கு பதில் பிரதமா் லி கியாங், ரஷிய அதிபருக்கு பதில் வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் பங்கேற்பாா்கள் என்று அறிவித்துள்ளனா்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com