சந்திரயான் -2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படம்!

நிலவில் சந்திரயான் - 3ன் விக்ரம் லேண்டரை சந்திரயான் - 2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 
சந்திரயான் -2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படம்!

நிலவில் சந்திரயான் - 3ன் விக்ரம் லேண்டரை சந்திரயான் - 2 ஆர்பிட்டர் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. 

இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆக. 23 அன்று மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 

முதலில் லேண்டர் தரையிறங்கிய நிலையில் பின்னர் ரோவரும் தரையிறங்கி நிலவு மேற்பரப்பின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது. 

இந்த புகைப்படங்களின் மூலமாக நிலவின் மேற்பரப்பில் கந்தகம்(சல்ஃபா்) இருப்பதை பிரக்யான்' ரோவா் கண்டறிந்துள்ளதாகவும் ஹைட்ரஜனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்தது. 

தொடர்ந்து, விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளை இஸ்ரோ விடியோ மூலமாக வெளியிட்டு வருகிறது.

அதன்படி சந்திரயான் - 2 ஆர்பிட்டர், நிலவில் சந்திரயான் - 3ன் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது. 

செப்டம்பர் 6 ஆம் தேதி சந்திரயான்- 2 ஆர்பிட்டரின் இரட்டை அதிர்வெண் செயற்கை ரேடார் (Dual-frequency Synthetic Aperture Radar -DFSAR) மூலமாக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துளளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com