
விய்யூர் மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் கோவிந்த் ராஜ்(52). இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தண்டனை பெற்று விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தோட்ட வேலைக்காக கைதிகளை பிரதான வளாகத்தில் இருந்து சிறை வளாகத்தின் தோட்டப் பகுதிக்கு இன்று அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்க- அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்கிறார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!
அப்போது கோவிந்த் சிறையில் இருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்த சிறைத்துறை அதிகாரிகள், தப்பியோடிய கைதியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். காவலர்கள் கண்டுகொள்ளாத சமயத்தில் அவர் தப்பியோடிவிட்டதாக விய்யூர் போலீசார் தெரிவித்தனர்.
விய்யூர் மத்திய சிறையில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் கேரளத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.