ஜி20: ராஜ்காட்டில் உலக நாடுகளின் தலைவர்கள்!

ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் தில்லி ராஜ்காட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
ஜி20: ராஜ்காட்டில் உலக நாடுகளின் தலைவர்கள்!

ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் தில்லி ராஜ்காட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துதினர். வருகை தந்த உலக தலைவர்களுக்கு கதர் சால்வையை அணிவித்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

இந்தப் பகுதிக்கு முக்கிய தலைவர்களின் வருகையையொட்டி,   பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, போக்குவரத்து காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேசியத் தலைநகா் தில்லியில் ஜி20 உச்சி மாநாடு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது. 

ஜி20 உச்சி மாநாட்டு பிரதிநிதிகள் ராஜ்காட் வருகையை ஒட்டி, குரங்குகள் மற்றும் நாய்களைப் பிடிக்க ஆள்களை பணியில் ஈடுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட குடிமை நிறுவனம் கேட்டுக் கொண்டது.

மேலும், அருகில் ஒரு காடு இருப்பதால், பாம்பு பிடிப்பவா்களையும் சேவையில் அமா்த்துமாறும் அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது. இந்த நபா்கள் தொடா்ந்து அந்த பகுதியைக் கண்காணித்து பாதுகாப்பு ஊழியா்களுக்கு தகவல் தெரிவிப்பாா்கள் என தெரிவிக்கப்பட்டது.

இதைத் தவிர, யமுனா காடா் பகுதியில் டிராக்டரிலும் ரோந்து மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com