தில்லி வந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை மரியாதை நிமித்தமாக புதன்கிழமை சந்தித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து தில்லிக்கு வந்தார்.
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு அலுவல்களை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே புதன்கிழமை குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரை மெüலானா ஆஸாத் சாலையிலுள்ள குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இருவரும் சுமார் அரை மணி நேரம் பேசினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் குடியரசு துணைத் தலைவராக தன்கர் தேர்வு செய்யப்பட்ட போதும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆகஸ்ட் 26 -ஆம் தேதி மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு 2-ஆவது முறையாக இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நியமனம், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதி நியமனம் போன்ற விவகாரங்களில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.
இது தொடர்பாக முக்கியப் பிரமுகர்களை தமிழக ஆளுநர் சந்திக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காணொலி வழியாக தில்லியிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் புதன்கிழமை பங்கேற்றார்.
செப்டம்பர் 15-ஆம் தேதி ஆளுநர் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


