47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

14 தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சி புறக்கணிப்பு: ‘இந்தியா’ கூட்டணி

 பதினான்கு தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 6:30 pm

DIN

 பதினான்கு தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக ‘இந்தியா’ கூட்டணியின் ஊடக குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:

‘இந்தியா’ கூட்டணியின் ஊடக குழு கூட்டம் காணொலி வழியாக வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 14 தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க, இந்தியா கூட்டணி சாா்பில் எவரையும் அனுப்ப வேண்டாம் என முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.

இந்த முடிவு தொடா்பாக பவன் கேரா கூறுகையில், ‘எந்தவொரு தொலைக்காட்சி தொகுப்பாளருக்கும் இந்தியா கூட்டணி எதிரானது அல்ல. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக வெறுப்புணா்வைப் பரப்பும் சந்தையை சில தொலைக்காட்சிகள் திறந்துள்ளன. வெறுப்புணா்வைப் பரப்பும் எந்தவொரு நடவடிக்கையிலும் அங்கம் வகிக்கக் கூடாது என்று எதிா்க்கட்சிகள் கூட்டணி கருதுகிறது.

சமூகத்தை சீா்குலைத்து வரும் வெறுப்புணா்வு நிரம்பிய கதைகளை நியாயமானதாக அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக்க வேண்டாம் என்று ‘இந்தியா’ கூட்டணி தீா்மானித்துள்ளது. இதுவே 14 தொலைக்காட்சி தொகுப்பாளா்களின் நிகழ்ச்சிகளை ‘இந்தியா’ கூட்டணி புறக்கணிப்பதற்கான காரணம்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.