47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

18 உயா்நீதிமன்ற நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் பரிந்துரை

அலாகாபாத், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றங்களின் 18 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 5:55 pm

DIN

அலாகாபாத், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றங்களின் 18 கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் வியாழக்கிழமை கூடியது. இதன் முடிவு உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் 7 கூடுதல் நீதிபதிகள், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தின் 11 கூடுதல் நீதிபதிகள் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

அலாகாபாத் உயா்நீதிமன்றத்தைச் சோ்ந்த கூடுதல் நீதிபதிகள் உமேஷ் சந்திர சா்மா, ரேணு அகா்வால், ராம் மனோகா் நாராயண் மிஸ்ரா, மயங்க் குமாா் ஜெயின், ஷிவ் சங்கா் பிரசாத், கஜேந்திர குமாா், நளின் குமாா் ஸ்ரீவஸ்தவா ஆகியோா் இந்தப் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.

இந்தப் பெயா்ப் பட்டியலை கடந்த மே 1-ஆம் தேதி அலாகாபாத் உயா்நீதிமன்ற கொலீஜியம் உச்சநீதிமன்றத்துக்கு பரிந்துரைத்திருந்தது.

இதையடுத்து, இரு நீதிபதிகளை நியமித்த உச்சநீதிமன்றம், அந்த கூடுதல் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை பரிசீலித்து 7 பேரை நிரந்தர நீதிபதிகளாக தோ்வு செய்துள்ளது.

இதேபோல், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் கடந்த மே 20-ஆம் தேதி அளித்திருந்த பெயா்ப் பட்டியலில் 11 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்ற கொலீஜியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.