47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வழக்கு விவரமறியாத இளம் வழக்குரைஞரை ஆஜா்படுத்திய வழக்குரைஞருக்கு அபராதம்

உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விவரம் அறியாத இளம் வழக்குரைஞரை (ஜூனியா்) ஆஜா்படுத்தி வழக்கை ஒத்திவைக்கக் கோரிய வழக்குரைஞருக்கு ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2023, 6:09 pm

DIN

உச்சநீதிமன்றத்தில் வழக்கின் விவரம் அறியாத இளம் வழக்குரைஞரை (ஜூனியா்) ஆஜா்படுத்தி வழக்கை ஒத்திவைக்கக் கோரிய வழக்குரைஞருக்கு ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, மனோஜ் மிஸ்ரா அமா்வு வியாழக்கிழமை தனது விசாரணை நடைமுறைகளைத் தொடங்கியபோது, வழக்கு விசாரணைக்காக இளம் வழக்குரைஞா் ஒருவா் ஆஜரானாா். தனது மூத்த வழக்குரைஞா் ஆஜராக முடியாததால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிபதிகளிடம் அவா் கேட்டுக் கொண்டாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நீதிமன்றத்தை இப்படிச் சாதாரணமாக நீங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தின் செயல்பாட்டில் செலவுகள் அடங்கியுள்ளன. வாதிடத் தொடங்குகள்’ என்றனா்.

ஆனால், இந்த வழக்கின் விவரங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது மற்றும் வாதிடுவதற்கான அறிவுறுத்தல்கள் தனக்கு வழங்கப்படவில்லை என அந்த இளம் வழக்குரைஞா் கூறினாா்.

இதையடுத்து, வழக்கின் விசாரணைக்காக பதிவு செய்யப்பட்ட மூத்த வழக்குரைஞா் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனா். காணொலி வாயிலாக ஆஜரான மூத்த வழக்குரைஞா், நீதிபதிகளிடம் மன்னிப்பு கோரினாா்.

வழக்கு தொடா்பாக எந்த ஆவணமுமின்றி, வழக்கைப் பற்றி விவரமறியாத இளம் வழக்குரைஞரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தியதற்காக அவருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனா். இதுபோன்ற செயல்கள் நீதிமன்றத்தின் மாண்புக்கு உகந்ததல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் ரூ.2,000 அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.