மணிப்பூர் வன்முறைக்கு 175 பேர் பலி: 4,786 வீடுகள் தீ வைப்பு எரிப்பு!

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,108 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1,108 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நான்கு மாதங்களில் நிகழ்ந்த வன்முறை விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். 

காவல்துறை வெளியிட்ட தகவலில், 

மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த கலவரத்தில் இதுவரை 175 பேர் பலியாகியுள்ளனர். 1108 பேர் காயமடைந்தனர். 32 பேர் காணாமல் போயுள்ளனர். 

4,786 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், அதில் 386 மதக் கட்டடங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட 386 மதக் கட்டங்களில் 254 தேவாலயங்கள் மற்றும் 132 கோயில்கள் ஆகும். 

காணாமல் போன ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகள் மற்றும் 15,050 பல்வேறு வகையான வெடிபொருள்களை போலீஸார் மீட்டுள்ளனர். 

வன்முறையில் உயிரிழந்த 175 பேரில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 79 உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளதாகவும், 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com