
தெலங்கானா மாநிலத்தில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை அந்த மாநிலம் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
மாநிலத்தில் கடந்த 2014-ல் ஐந்து ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 26 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ராவ் பேசியது,
கரிம்நகர், கமரேடி, கம்மம், பூபாலபள்ளி, அசிஃபாபாத், நிர்மல், சிரிசில்லா, விகராபாத் மற்றும் ஜங்கான் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவ இடங்களின் எண்ணிக்கை கடந்த 2014-ல் 2,850 ஆக இருந்த நிலையில் தற்போது 8,516 ஆக அதிகரித்துள்ளது.
அடுத்தாண்டு, மேலும் 8 புதிய அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என்றார்.
தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் டி.ஹரிஷ் ராவ் கூறுகையில்,
நாட்டிலேயே ஒரே நாளில் 9 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா மருத்துவக் கல்வித் துறையில் இதுவே முதல் முறையாகும் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.