2000 ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடு நெருங்குகிறது

நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது.
2000 ரூபாயை மாற்றுவதற்கான காலக்கெடு நெருங்குகிறது


புது தில்லி: நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அறிமுகப்படுத்தப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் (சனிக்கிழமை) நிறைவடைகிறது.

1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்த போது அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ஆர்பிஐ அறிவித்த நிலையில், அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தது. மக்களின் வசதிக்காக, ஒரு சில இடங்களில் இன்னமும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது.

இதற்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் கையில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 3.32 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருப்பதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது.

87 சதவீத நோட்டுகள் வங்கியில் வரவு வைக்கப்பட்டதாகவும், 13 சதவீத நோட்டுகள் சில்லறையாக மாற்றிக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு அறிமுகமாக 2,000 ரூபாய் நோட்டு, மெல்ல புதிய நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு, புழக்கத்தில் இருந்து குறைந்து, செப்டம்பர் மாதத்தோடு இல்லாமலே போகப்போகிறது.

எனவே, மக்கள் தங்கள் கையில் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதனை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே, 97 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com