எதிர்க்கட்சி கூட்டணியின் முந்தைய பெயர் ஊழலுடன் சம்பந்தப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என புதிய பெயர் வைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பிகாரில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஹிமாச்சலப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி முதியவர், பேரன் பலி!
அப்போது அவர் பேசியதாவது: அவர்கள் (எதிர்க்கட்சிகள்) அவர்களது புது கூட்டணிக்கு புதிய பெயர் வைத்துள்ளனர். அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் செயல்பட்டு ரூ.12 லட்சம் கோடி அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். லாலு யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது கோடிக்கணக்கான ரூபாய் ஊழலில் ஈடுபட்டுள்ளார். அவர்களால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் திரும்ப பிரசாரம் செய்ய முடியாது. அதன் காரணமாக இந்தியா என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டணியில் உள்ளவர்கள் இராமன் சரிதமானஸை மதிப்பதில்லை. ரக்ஷா பந்தன் போன்ற விழாக்களுக்கான விடுமுறையை அவர்கள் நீக்கியுள்ளனர். இந்த முடிவுக்கு எதிராக நின்ற மக்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.