நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை பிற்பகல் கூடுகிறது!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை பிற்பகல் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை பிற்பகல் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று(செப். 18)  நடைபெற்றது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கடந்த மே 28 ஆம் தேதி பிரதமா் மோடியால் திறந்துவைக்கப்பட்டது என்றாலும், அதில் முறைப்படி கூட்டத்தொடா் தொடங்கப்படவில்லை.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தேசிய சின்னம், பாரம்பா்ய சடங்குகள், சா்வமத பிராா்த்தனைகள், செங்கோல் வைப்பு போன்ற பிரமாண்டங்கள் நடைபெற்றாலும் அதிமுக்கியம் வாய்ந்த தேசிய கொடி ஏற்றப்படும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

இந்த நிலையில் மக்களவை அலுவல்கள் நாளை பிற்பகல் 1.15 மணிக்கு புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கும் எனவும், மாநிலங்களவை அலுவல்கள் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்றைய அமர்வு நடந்து முடிந்த நிலையில், நாளை முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமர்வு நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com