காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவரும் நிலையில் தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மேலும் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 26 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீர் திறந்துவிடுகிறதா என்பதை காவிரி ஒழுங்காற்றுக் குழு கண்காணிக்கும், மேலும் காவிரி நீர் விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்யும்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நாளை(செப். 19) சந்திக்கவுள்ளது.
இதற்கு முன்னதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் இன்று சந்திப்பு மேற்கொண்டார். காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினீத் குப்தா, செயலாளர் டி.டி. ஷர்மா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க | மக்களவைத் தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயார்: நிதீஷ் குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

