நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று பிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார், 'மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக நான் கூறி வருகிறேன். தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம். பிகாரில் பல வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம். சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள்' என்றார்.
இதையும் படிக்க | தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
அப்போது உடனிருந்த பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், வரும் தேர்தலில் நாங்கள் ஒற்றுமையுடன் போராடுவோம் என்றும் கூறினார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி வைத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK


