நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

News image

அர்ஷ்தீப் சிங் - படம் | AP

Updated On :19 ஜூன் 2026, 9:47 pm IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜூன் 20) சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில், தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

காயம் காரணமாக நீண்ட நாள்களாக அணியில் இடம்பெறமாலிருந்த வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்கிய வீரர்கள் இல்லாமல் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பளிக்க உள்ளதாக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் வெவ்வேறு இடங்களில் களமிறங்கி சிறப்பாக விளையாடும் வீரர்கள் இருப்பது சிறப்பான விஷயம். கே.எல்.ராகுல் முன்கூட்டியே களமிறக்கப்பட வேண்டும் என நான் நினைக்கவில்லை. கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால், ஜெய்ஸ்வால் எங்கு களமிறங்குவார் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஜெய்ஸ்வால் பெரிய அளவில் ரன்கள் குவிக்கததால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்படலாம். அதனால், இந்திய அணி 5 பேட்டர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியுடன் களமிறங்கலாம். முதல் இரண்டு போட்டிகளில் களமிறக்கப்பட்ட அணியிலிருந்து, கடைசிப் போட்டிக்கான அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும். சில காம்பினேஷனை நாங்கள் முயற்சி செய்து பார்க்க விரும்புகிறோம். முதல் இரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடிய அர்ஷ்தீப் சிங்குக்கு நாளை நடைபெறும் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம். சிறப்பாக விளையாடிய பேட்டர்களுக்கும் ஓய்வு அளிக்கப்படலாம். இதனால் மற்ற வீரர்கள் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில், அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஹர்ஷித் ராணா நாளை நடைபெறும் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிகம் வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

It is reported that Harshit Rana might replace Arshdeep Singh in the third and final ODI against Afghanistan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.