முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

லார்ட்ஸில் 3-வது ஒருநாள்: தொடரை வெல்லப்போவது யார்?

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

News image

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக் - படம் | பிசிசிஐ

Updated On :18 ஜூலை 2026, 6:13 pm IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் திடலில் நாளை (ஜூலை 19) நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றதால் தொடர் சமனில் உள்ளது. இதனால், கடைசிப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கு முன்பாக, இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி அந்த தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. டி20 தொடரை இழந்த நிலையில், ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் 11 ரன்களும், இரண்டாவது போட்டியில் 26 ரன்களும் எடுத்தார். முதல் போட்டியில் விராட் கோலி 5 ரன்களும், இரண்டாவது போட்டியில் 65 ரன்களும் எடுத்தார். தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் இவர்கள் இருவரின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இந்த இரண்டு அணிகளில் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Summary

Anticipation is mounting among fans for the final match of the ODI series between India and England, which will decide the winner.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.