தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

லார்ட்ஸ் டெஸ்ட்: 270 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க லார்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :13 ஜூலை 2026, 5:34 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க லார்ட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 285 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

115 ரன்கள் என்ற முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 341 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. இங்கிலாந்தைக் காட்டிலும் இந்திய அணி 456 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 457 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷ்திகா பாட்டியா சதம் விளாசி அசத்தினார். அவர் 158 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஸ்மிருதி மந்தனா 70 ரன்களும், ரிச்சா கோஷ் 50* ரன்களும் எடுத்தனர். ஷஃபாலி வர்மா 33 ரன்கள் எடுத்தார்.

457 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 186 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக எமி ஜோன்ஸ் 54 ரன்களும், சோஃபி எக்கல்ஸ்டோன் 50 ரன்களும் எடுத்தனர். மேடி வில்லியர்ஸ் 26 ரன்கள் மற்றும் அலைஸ் கேப்ஸி 21 ரன்கள் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சயாலி சத்கரே, கிராந்தி கௌட் மற்றும் தீப்தி சர்மா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற முதல் மகளிர் டெஸ்ட் போட்டியை வென்ற அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Indian team achieved a magnificent victory by a margin of 270 runs in the historic Lord's Test match against England.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.