தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!

'ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்' ஐபிஓ வெளியீட்டிற்கான வரைவு ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஒப்புதல் அளித்த அதே நாளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

Reliance Industries

Published On :

புதுதில்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான, இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது 49வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை இன்று நடத்தியது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவான 'ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ்' ஐபிஓ வெளியீட்டிற்கான வரைவு ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஒப்புதல் அளித்த அதே நாளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இந்த ப்ளூசிப் நிறுவனத்தின் பங்கு 1.39 சதவீதம் சரிந்து ரூ. 1,309.35 ஆக முடிவடைந்தது. வர்த்தகத்தின் போது 1.67 சதவீதம் சரிந்து ரூ. 1,305.50 வரை சென்றது.

நிஃப்டி-யில் 1.40 சதவீதம் சரிந்து ரூ. 1,309.50 ஆக நிலைபெற்றது.

இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 24,891.09 கோடி குறைந்து ரூ. 17,71,882.96 கோடியாக சரிந்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 49 வது ஆண்டு பொதுக்குழுவில் பேசிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி, சுமார் 27 கோடி வரையிலான ஐபிஓ-விற்கான வரைவு ஆவணங்களைச் சமர்ப்பிக்க ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் லிமிடெட் தெரிவித்தது.

சுமார் ரூ. 37,700 கோடி வரை நிதி திரட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படும், இதுவரை இல்லாத மிகப்பெரிய ஐபிஓ-விற்கான வரைவு ஆவணங்களை ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் சமர்ப்பித்தது.

தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் 66.43 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள நிலையில், மெட்டா நிறுவனம் 9.99 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது.

Summary

Reliance Industries ended over 1 per cent lower today amid profit-taking on a day when the board of Jio Platforms Ltd approved filing draft papers for an initial public offering.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.