வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்படும்: பிரதமர் மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரானது வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரானது வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் தோ்தல் ஆணையா்களை நியமிப்பதற்கான மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், சிறப்புக் கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் மோடி பேசியது:

"நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் காலம் குறுகியதாக இருந்தாலும், தற்போதைய சூழலில் மிகப்பெரியது. வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும்.

இந்த கூட்டத்தொடரின் சிறப்பு என்னவென்றால், 75 ஆண்டுகால பயணமானது புதிய இடத்திலிருந்து தொடங்கவுள்ளது. 2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு. இதற்கான அனைத்து முடிவுகளும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் எடுக்கப்படும்.

நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் தொடங்கும்." எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com