பழைய நாடாளுமன்றத்தில் இறுதி நாள்: நாளை புதிய கட்டடத்தில் கூட்டம்!

பழைய நாடாளுமன்றத்தில் இறுதி நாள்: நாளை புதிய கட்டடத்தில் கூட்டம்!

புதிதாக கட்டடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அலுவல்கள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்டடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அலுவல்கள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு தில்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் கட்டியுள்ளது. அதில் முதல் முறையாக கூட்டத்தொடரை நடத்தும் வகையில், சிறப்புக் கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.

பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியுள்ளது. அதில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நாளை அலுவல்கள் தொடங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பழைய நாடாளுமன்றத்தில் இன்று இறுதி அமர்வு நடைபெறவுள்ளதாக மக்களவையில் அவைத் தலைவர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com