மக்களவைத் தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயார்: நிதீஷ் குமார்

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் எப்போது வந்தாலும் நாங்கள் தயார்: நிதீஷ் குமார்
Updated on
1 min read

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று பிகாரில் செய்தியாளர்களிடம் பேசிய நிதீஷ் குமார், 'மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக நான் கூறி வருகிறேன். தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. 

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம். பிகாரில் பல வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம். சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள்' என்றார்.

அப்போது உடனிருந்த பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், வரும் தேர்தலில் நாங்கள் ஒற்றுமையுடன் போராடுவோம் என்றும் கூறினார். 

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி வைத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com