நீட் முதுநிலை தேர்வு: கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைப்பு

நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கும், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.

நிகழாண்டு முதுநிலை நீட் தோ்வுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உறைவிட மருத்துவா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஓஆா்டிஏ) கடிதம் எழுதியிருந்தது.

இந்த நிலையில், நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2வது சுற்று நீட் முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3வது சுற்று கலந்தாவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

நீட் முதுநிலை தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவது சுற்று கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com