

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பெண் நல்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாநில காவல்துறையின் ஒரு பிரிவான மாவட்ட ரிசர்வ் காவலர்(டிஆர்ஜி) குழு நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அரன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனத்தில் காலை 7 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
தண்டேவாடா-சுக்மா மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் நாகரம்-போரோ-ஹிர்மா காடுகளுக்கு அருகில் தடைசெய்யப்பட்ட அமைப்பான தார்பா பிரிவைச் சேர்ந்த நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ரோந்து குழுவினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பெண் நக்சலைட்களின் உடல்கள் மற்றும் ஒரு இன்சாஸ் ரைபிள் மற்றும் ஒரு 12 போர் ரைபிள் ஆகியவை சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாகக் காவல் அதிகாரி கூறினார். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.