ரயில் விபத்துகளில் இறந்தவர்களுக்கான இழப்பீடு தொகை 10 மடங்காக உயர்வு!

ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரயில் விபத்துகளில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வழங்கும் இழப்பீடுத் தொகை 10 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் ரயில்வே சட்டம், 1989 பிரிவு 124, 124ஏ ஆகிய பிரிவுகளைத் திருத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

பிரிவு 124 இன் கீழ், ரயில் விபத்துக்களில்(Train accident) உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும் லேசான காயங்களுக்கு ரூ.50,000-மும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

பிரிவு 124ஏ -ன் கீழ் எதிர்பாராத சம்பவங்களில்(untoward incidents) இறந்தவர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ. 1.5 லட்சமாகவும் படு காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், லேசான காயங்களுக்கு ரூ.5 ஆயிரம் என உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில்(ரயில்வே தவறாக இருந்தால்) ஏற்பட்ட விபத்துக்களில் இறந்தவர்களுக்கு  ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயங்களுக்கு ரூ.50,000 கருணைத் தொகையாக வழங்கப்பட உள்ளது. 

படுகாயமடைந்த பயணிகள் 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு கூடுதல் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரயில் விபத்து(Train accident)  என்றால், 30 நாள்களுக்குப் பிறகு, ஒவ்வொரு 10 நாள் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியில் (இவற்றில் எது முதலாவதோ) நாள் ஒன்றுக்கு ரூ. 3,000 வழங்கப்படும். 

எதிர்பாராத சம்பவங்கள்(untoward incidents) நடந்தால் ஒவ்வொரு 10 நாள் முடிவில் அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியில், நாளொன்றுக்கு ரூ. 1,500 கூடுதல் கருணைத் தொகை வழங்கப்படும். 6 மாதங்கள் வரை இந்த கூடுதல் தொகை வழங்கப்படும். 

படுகாயமடைந்தவர்களுக்கு அதிகபட்சமாக 12 மாதங்கள் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com