நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் விசாரணை!

திறன் மேம்பாட்டு நிறுவன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

கோப்புப்படம்

Published On :2 பிப்ரவரி 2024, 8:30 am IST

திறன் மேம்பாட்டு நிறுவன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் இன்று விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் ரூ.300 கோடியை தவறாகக் கையாண்டு ஊழல் செய்ததாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தது.

இதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் மாநில சிஐடி(குற்ற புலனாய்வுத் துறை) போலீஸார் கோரிக்கைக்கு ஏற்ப, சந்திரபாபு நாயுடுவுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, சந்திரபாபு நாயுடுவிடம் சிஐடி போலீசார் இன்று(சனிக்கிழமை) விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இன்றும் நாளையும்(சனி, ஞாயிறு) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை நடைபெறுகிறது. 

ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் வைத்து சந்திரபாபு நாயுடுவிடம் 12 பேர் கொண்ட சிஐடி அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடம் தனது வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்க சந்திரபாபு நாயுடுவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விசாரணை விடியோவாகவும் பதிவு செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.