இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!

கால்பந்து உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முதல் அணியாகத் தேர்வான மெக்சிகோ குறித்து...

Players from Mexico celebrate after the World Cup Group A soccer match between Mexico and South Korea in Zapopan, near Guadalajara, Mexico, Thursday, June 18, 2026. (AP Photo/Silvia Izquierdo)

வெற்றிக் களிப்பில் மெக்சிகோ அணியினர். - படம்: ஏபி

Published On :

கால்பந்து உலகக் கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக மெக்சிகோ அணி தேர்வாகி அசத்தியுள்ளது.

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் ஜூன் 11 முதல் மெக்சிகோ, கனடா, அமெரிக்காவில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதலில் 48 அணிகளுக்கான லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெறும். இதிலிருந்து 32 அணிகள் அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும். அதிலிருந்து 16 அணிகளும் அதிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்கும், 4 அணிகள் அரையிறுதிக்குமாகத் தேர்வு செய்யப்படவிருக்கிறது.

மெக்சிகோ அணி தென் கொரியாவுடன் மோதிய லீக் சுற்றில் 1-0 என வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் 50ஆவது நிமிஷத்தில் லூயிஸ் ரோமோ கோல் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் 51 சதவிகித பந்தை கொரியா தன்வசம் வைத்திருந்தாலும் இறுதிவரை கோல் அடிக்க முடியாமல் திணறியது.

முதல் போட்டியில் மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை 2-0 என வீழ்த்தியது. இரண்டு போட்டிகளில் 4 புள்ளிகள் பெற்று முதல் அணியாக ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்குத் தேர்வாகியுள்ளது.

Summary

Mexico becomes the first team to qualify for the Round of 32!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.