பொறியியல் கலந்தாய்வு எப்போது? தேதியை அறிவித்தார் அமைச்சர் விஸ்வநாதன்மாயமான காக்கிநாடா குழந்தை எங்கே? துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?
/

40 ஆண்டுகள் கனவு நனவானது... ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதிபெற்ற மெக்சிகோ குறித்து...

News image

வெற்றிக் களிப்பில் மெக்சிகோ வீரர்கள். - படம்: ஏபி

Updated On :1 ஜூலை 2026, 2:53 pm IST

மெக்சிகோ அணி கால்பந்து உலகக் கோப்பையில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

மெக்சிகோவில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மெக்சிகோவும் ஈகுவடார் அணியும் மோதின. இந்தப் போட்டியில் 22ஆவது நிமிஷத்தில் மெக்சிகோ வீரர் ஜூலியன் குயினோன்ஸ் கோல் அடித்தார்.

அடுத்த சில நிமிஷங்களில் (31’) ரவுல் ஜிமெனெஸ் கோல் அடித்து முதல் பாதியில் 2-0 என மெக்சிகோ முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் திணறின.

ஈகுவடார் அணியின் வீரர் பியரோ ஹிங்காபிக்கு 90+5ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது. இந்த வெற்றிக்குப் பிறகு மெக்சிகோ ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முன்னதாக, 7 முறை தொடர்ச்சியாக 1994, 1998, 2002, 2006, 2010, 2014 மற்றும் 2018 உலகக் கோப்பைகளில் இதே மாதிரியான சூழ்நிலையில் வெளியேறியிருக்கிறது.

கடந்த 2022 உலகக் கோப்பையில் ஆர்ஜென்டீனாவிடம் தோல்வியுற்று முதல்முறையாக குரூப் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோ மீண்டும் தனது சொந்த மண்ணில் மற்றுமொரு போட்டியில் விளையாடவிருக்கிறது. இங்கிலாந்து, காங்கோ இதில் வெல்லும் அணியுடன் மெக்சிகோ விளையாடவிருக்கிறது.

இடியுடன் கூடிய மழையினால் இந்தப் போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக நடைபெற்றது. இந்த உலகக் கோப்பையில் வானிலையால் தாமதமாவது இது இரண்டாவது போட்டி என்பதும் கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவில் பிலடெல்பியா கால்பந்து திடலில் நடைபெற்ற பிரான்ஸ் - இராக் இடையேயான போட்டி முதல் பாதிக்குப் பிறகு மோசமான வானிலை நிகழ்வினால் 2 மணி நேரம் தாமதமாகியது வரலாற்றில் இடம்பிடித்தது

Summary

Mexico ends a 40-year knockout drought, beats Ecuador 2-0 to reach the round of 16

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.