உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் கொலம்பியா அணி 1-0 என கானாவை வீழ்த்தி, காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 14ஆவது நிமிஷத்திலேயே கொலம்பியாவின் ஜான் ஏரியாஸ் கோல் அடித்து அசத்தினார்.
முதல் பாதியில் 1-0 என கொலம்பியா முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியிலும் இதே நிலையே தொடர்ந்தது. கானா அணி எவ்வளவு முயன்றும் சமன்படுத்த முடியாமல் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
இந்தப் போட்டியில் 54 சதவிகித பந்தை கொலம்பியா தன்வசம் வைத்திருந்தது. இரண்டாவது கோல் அடிக்க பல முறை முயன்று ஆஃப்சைடானது. இருப்பினும் இலக்கை நோக்கி 8 முறை பந்தை அடித்தது.
கானா கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு பல கோல்களை தடுத்தார். ஒரேயொரு கோல் மட்டுமே அவர் இந்தப் போட்டியில் தவறவிட்டார். அந்த அணியினால் அந்த கோலை கடைசி வரை சமன்படுத்த முடியாமல் வெளியேறியது.
கொலம்பியா இதுவரை 7 முறை உலகக் கோப்பையில் விளையாடி இருக்கிறது. அதில் 5 முறை காலிறுதிக்கு முந்தைய சுற்றுவரை முன்னேறியிருக்கிறது. அதில் ஒருமுறை காலிறுதிக்கும் சென்று தோல்வியுற்றுள்ளது.
Summary
Jhon Arias scores and Colombia beats Ghana 1-0 to reach the World Cup Round of 16
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










