மன்மோகன் சிங் பிறந்தநாள்: உண்மையான அரசியல்வாதி என காங். புகழாரம்

மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவரது வார்த்தைகளை விட அவரது செயல்களே பேசுகின்றன என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
மன்மோகன் சிங் பிறந்தநாள்: உண்மையான அரசியல்வாதி என காங். புகழாரம்

புது தில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாளில் அவரது பேச்சுகளை விடவும் அவரது செயல்களே பேசுகின்றன என்றும், அவர்தான் 'உண்மையான அரசியல்வாதி' என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மன்மோகன் சிங், 2004 மற்றும் 2014 க்கு இடையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைமையிலான ஆட்சியில் பிரதமராக இருந்து நாட்டை வழிநடத்தினார். இன்று அவர் தனது 91வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

1991-96 ஆம் ஆண்டில் பி வி நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசில், இந்தியாவின் நிதியமைச்சராகவும் இருந்தார், அந்தக் காலம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட  மிகப்பெரிய சீர்திருத்தங்களால், நாட்டின் பொருளாதாரத்தின் சகாப்தமாக அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மன்மோகன் சிங்கின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் கார்கே, அரசியலில் எளிமை, கண்ணியம் மற்றும் கருணைக்கு அரிய உதாரணமாக திகழ்பவர் என்று பாராட்டியுள்ளார்.

"ஒரு உண்மையான அரசியல் பிரதமர், அவரது வார்த்தைகளை விட அவரது செயல்கள் அதிகம் பேசுகின்றன, தேசத்திற்கு அவர் செய்த மகத்தான பங்களிப்பிற்கு நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தேசத்தைக் கட்டியெழுப்ப மன்மோகன் சிங்கின் பங்களிப்புகளை குறிப்பிட்டு பாராட்டினார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் நேர்மை, தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை எனக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும்" என்று காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பிறந்தநாளில் அவர் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அடைய விரும்புகிறேன்," என்று ராகுல் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com