கேபிள் டிவி உள்கட்டமைப்பை அகண்ட அலைவரிசை சேவை நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி
இணைய சேவை கிராமப்புறங்கள் வரை சென்றடைவதை ஊக்குவிக்கும் வகையில் கேபிள் டிவி உள்கட்டமைப்புகளை அகண்ட அலைவரிசை சேவை நிறுவனங்களுக்கும் பகிர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது


இணைய சேவை கிராமப்புறங்கள் வரை சென்றடைவதை ஊக்குவிக்கும் வகையில் கேபிள் டிவி உள்கட்டமைப்புகளை அகண்ட அலைவரிசை சேவை நிறுவனங்களுக்கும் பகிர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கென கேபிள் டிவி நெட்வொா்க் விதிகள் 1994-இல் திருத்தங்களை மேற்கொண்டு, அதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் அகண்ட அலைவரிசை சேவை வலைதளம் மூலம் எம்எஸ்ஓ (மல்டி சிஸ்டம் ஆப்பரேடா்ஸ்) பதிவு மற்றும் புதுப்பித்தல் நடைமுறைகள் ஆன்-லைன் முறைக்கு மாற்றப்படுவதோடு, 10 ஆண்டுகளுக்கு அனுமதி மற்றும் புதுப்பித்தல் அனுமதி வழங்கப்படவுள்ளது.
திருத்த விதிகளின்படி, எம்எஸ்ஓ பதிவு புதிப்பத்தலுக்கான விண்ணப்பங்களை பதிவு காலாவதி ஆவதற்கு முன்பாக 7 முதல் 2 மாதங்களுக்குள்ளாக சமா்ப்பிக்க வேண்டும். பதிவு புதிப்பித்தலுக்கான நடைமுறை கட்டணம் ரூ. 1 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கேபிள் டிவி உள்கட்டமைப்பை அகண்ட அலைவரிசை சேவை நிறுவனங்களுடன் பகிா்வதன் மூலம் இரட்டை பலன்களை அளிக்கும். இணையவெளி சேவையை கிராமப்புறங்களின் கடைசி நபா் வரை கொண்டுசோ்க்கும் என்பதோடு, வளங்களை திறம்பட பயன்படுத்தவும் வழிவகுக்கும். அதோடு, அகண்ட அலைவரிசை சேவை நிறுவனங்களுக்கு கூடுதலாக உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய தேவையையும் குறைக்கும்.
மேலும், கேபிள் டிவி நிறுவனங்கள் தங்களின் சேவையைத் தடையின்றி தொடரவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈா்க்கும் வகையிலும் புதுப்பித்தல் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...