பஞ்சாப்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

பஞ்சாப்பில் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சுக்பால் சிங் கைராவை மாநில போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.
பஞ்சாப்: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ கைது

பஞ்சாப்பில் போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சுக்பால் சிங் கைராவை மாநில போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

பஞ்சாப்பின் ஃபஸில்கா மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாதில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குருதேவ் சிங் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். போதைப் பொருள்கள், மயக்க மருந்துகள் சட்டத்தின்கீழ் (என்டிபிஎஸ்) அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவா்களிடமிருந்து 2 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 24 தங்கக் கட்டிகள், நாட்டுத் துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, 2 பாகிஸ்தான் சிம் காா்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதுசெய்யப்பட்ட குருதேவ் சிங் காங்கிரஸ் எம்எல்ஏ கைராவுக்கு மிகவும் நெருக்கமானவா்.

இந்த வழக்குத் தொடா்பாக காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜிபி) ஸ்வபன் சா்மா தலைமையில் சிறப்பு விசாரணை குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இக்குழு நடத்திய விசாரணையின்போது போலாத் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ கைராவுக்கும் இந்த விவகாரத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், எம்எல்ஏ கைராவின் வீட்டில் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் சோதனை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (எஸ்பி) மன்ஜீத் சிங் தலைமையிலான குழு, என்டிபிஎஸ் சட்டத்தின்கீழ் அவரைக் கைது செய்தது.

இதையடுத்து, ஆளும் ஆம் ஆத்மி அரசு பழிவாங்கும் நடவடிக்கையாக காங்கிரஸ் எம்எல்ஏ கைதுசெய்யப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சியான காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஆம் ஆத்மி, சட்டத்தின்படியே எம்எல்ஏ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com