மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இம்பாலில் இன்று காலை அமைதி நிலவி வந்தாலும், நேற்றிரவு முழுவதும் வன்முறை மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலையும் நிலவி வருகின்றது.
இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் மற்றும் மருந்துகளை வாங்க உதவும் வகையில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தியுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு மக்கள் கூட்டமாக கூடவும், சட்டவிரோதமான போராட்டங்களுக்குப் பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.
இம்பாலில் உள்ள ஹெய்ங்காய் பகுதியில் உள்ள முதல்வரின் பழைய வீட்டின் மூது தாக்குதல் நடத்த முயற்சி நடந்தது. சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் பலமுறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி முயற்சியை முறியடித்தனர்.
இம்பாலின் கிழக்கில் உள்ள ஹட்டா மினுதோங்கில், இரண்டு மாணவர்களின் கொலைக்கு நீதி கோரி பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியைத் தடுத்ததால் வன்முறையாக மாறியது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்பால் கிழக்கில் உள்ள செக்கோன் என்ற இடத்தில் வியாழன் இரவு ஒரு கும்பலால் வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.